இங்கிலாந்து எதிரான நான்காவது டி20 போட்டி இந்திய த்ரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சியாக ஆட்டத்தின் 2வது ஓவரில் சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும்,திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இந்த ஓவரை வீசிய சாகிப் மஹ்மூத் மெய்டன் மற்றும் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவும் 29 ரன்னிலும் , ரிங்கு சிங் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்களும் , சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. டக்கெட் 39 ரன்னும் , சால்ட் 23 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு வந்த ஹாரி ப்ரூக் 26 பந்துகளில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இக்கட்டான நிலையில் பந்துவீசிய பிஷ்னோய் மற்றும் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் விட்டு கொடுத்து முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 19.3 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது.