பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பரவாய், எழுமூர், கீழபெரம்பலூர், வயலப்பாடி, அத்தியூர் ஆகிய பகுதியில், அரசு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், மக்களின் கோரிக்கைகளையும் மனுவாக பெற்றார்.
அதனைத்தொடர்ந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ கணேசனும் கலந்துகொண்டார். அப்போது, அத்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க:
அந்த பள்ளியில் பயின்று வரும் ரித்திக் என்ற 8ம் வகுப்பு பயிலும் சிறுவன், அமைச்சரிடம் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அப்பகுதியில் இயக்கப்படும் பேருந்து நடத்துனர், பேருந்தை தனது கிராமத்தில் நிறுத்த மருத்துவராகவும், அவதூக பேசி திட்டுவதாவும் புகார் அளித்தார்.
இந்த புகாரை தனது உதவியாளர் மூலமாக குறித்துக்கொண்டு அமைச்சர், நடத்துனரை கண்டிப்பதாக மாணவரிடம் வாக்குறுதி அளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட நடத்துனர் யார்? என கண்டறிந்து, தன்னிடம் நேரில் வந்து அவரை பார்க்க செல்லுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Video Thanks: Thanthi TV
இதையும் படிங்க: