மனித வாழ்க்கையின் உண்மையான தத்துவங்கள், யதார்த்தமான உண்மைகள் நிறைய உள்ளன. பேச வாய்ப்பு இருந்தும் பேச முடியா சூழ்நிலைகள், பேசக் கூடாது என ஒதுங்கி போனாலும் பேச வேண்டிய சூழல்கள் வந்து விடுகிறது. வாயை திறந்தாலும் பிரச்சனை.
வாயை மூடிக்கொண்டு இருந்தாலும் பிரச்சனை என்று வித விதமாக வம்புகள் எதிரே வந்து கம்பு சுற்றுவதுமுண்டு. ‘பேசாத வார்த்தைகளுக்கு நாமே உரிமையாளர்..பேசிய வார்த்தைகளுக்கு நாமே அடிமை’..என முதுமொழி
சொல்கிறது. பேசும் வார்த்தைகள் உண்மையா? இனிமையானதா? பயனுள்ளதா? என அறிந்தே பேசுவோம்.
உறவுகள் தொடர்வதும் அல்லது முடிவதும், அவரவர் பேச்சின் தன்மை பொறுத்தே அமையும்.சில சமயங்களில், நாம் சொன்ன வார்த்தைகள் ஒருவரின் வாழ்க்கை ஒளிமயமாக மாறக்கூடும்.அன்பான பாராட்டுகள், ஊக்குவிப்புகள் மற்றவர்களின் மனநிலையை மகிழ்வாக மாற்றக்கூடும்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
என்ற வள்ளுவர் வழி வாழ்ந்தாலே போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்குவதில்லை. ஓரிடத்தில் நீ அவமானப்படுத்தபட்டால் அவ்விடத்திலிருந்து நிறந்தரமாகவே விலகிவிடு. அன்பு, பாசம், என மீண்டும் சேர்ந்து நின்றால் அவமானங்கள் நிறந்தரமாகிவிடும்..ஒரு போதும் எவரிடமும் உங்களைப் பற்றி விளக்கம் கூறாதீர் .ஏனெனில், உங்களை நேசிக்கும் ஒருவருக்கு அது தேவைப்படுவதில்லை.
உங்களை வெறுக்கும் ஒருவர் அதை நம்பப்போவதில்லை. யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை..யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை..
யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை.. ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.
விலகி இருங்கள் உங்களை ஏமாற்றுபவர்களிடத்திலிருந்து மதிக்காதவர் களிடத்திலிருந்து உபயோகிப்பவர்களிடத்திலிருந்து விமர்சிப்பவர் களிடத்திலிருந்து தாழ்த்தி பேசுபவர்களிடத்திலிருந்து..சில நேரங்களில் சில மனிதர்களின் செயல்களை கண்டு ஆத்திரப்படுவதை விட! அமைதியாக சென்று விடுவது நல்லது. உண்மையான உறவு என்பது, நமக்காக விட்டுக்கொடுக்கும். ஆனால், நம்மை அடுத்தவரிடம் எதற்க்காகவும் விட்டுக்கொடுக்காது..
புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம். வாழ்க்கை முழுவதும். இந்த உலகில் நமக்கென யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதைவிட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசியுங்கள் வாழ்க்கை மாறும்.