2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது புதிதாக விஜய் களத்தில் இறங்க உள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடைசியாக தளபதி 69 திரைப்படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்குகின்றார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்கு பதவி என அடுத்தடுத்த வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றார்.
இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா அவர்கள், கட்சியில் பெரிய முடிவுகளை எல்லாம் தளபதி எடுத்துக் கொள்வார். நான் அன்று அவரிடம் கேட்டேன் அவர் எனக்கு வாக்கு கொடுத்தார் அதை தான் நான் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினேன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கட்சி தலைவர் விஜய் போட்டியிடுவார் என்று நான் அன்று உறுதியாக கூறினேன்.
நான் அவரிடம் இது குறித்து கேட்டபோது அன்று அவர் உறுதியளித்திருந்தார். இனிவரும் நாட்களில் தளபதி என்ன முடிவு எடுக்கிறாரோ அதன்படியே கட்சி நிர்வாகிகளும் செயல்படுவோம். நான் கேட்டதைப் போல 234 தொகுதிகளிலும் உள்ள மாவட்டத் தலைவர்கள் தளபதியிடம் கேட்பார்கள். ஆனால் எந்தத் தொகுதியில் போட்டி இடுவது என்பது தளபதி எடுக்கக்கூடிய முடிவு தான் என சிவா பேசியுள்ளார்.