நித்தியானந்தா ஒரு ஆன்மீக குருவாக தியான பீடம் ஒன்றை உருவாக்கினார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தா பல வழக்குகளில் தேடப்படும் நபராக உள்ளார். இதனைத் தொடர்ந்து இமயமலையில் தனக்கென கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அவ்வபோது யூடியூப் சேனல்களில் கூறிவந்துள்ளார். ஆனால் தற்போது வரை நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு நித்தியானந்தா எங்கு உள்ளார் என்ற தகவலை வழக்கு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
அதாவது மடங்களை நிர்வகிக்க தாக்கரே நியமிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்ததையொட்டி நித்தியானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லை தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் உள்ள ஒரு தீவில் உள்ளார் என அரசு தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் முடிவில் நீதிபதி, இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சனைதான் என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.