whatsapp பயனர்களே உஷார்…! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பகீர் குற்றசாட்டு..!!
SeithiSolai Tamil February 02, 2025 04:48 AM

இஸ்ரேல் நாட்டில் பாராகன் சொல்யூஷன் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்த்ததாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, இஸ்ரேலிய ஸ்பைவர் நிறுவனம் கிட்டத்தட்ட 100 பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிபில் சமூக உறுப்பினர்களின் தொலைபேசிகளை ஹேக் செய்து, இஸ்ரேலியா ஹேக்கிங் மென்பொருள் நிறுவனமான பா ராகான் சொலுஷன் பைபர் மூலம் இந்த பயனர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் ஜீரோ கிளிக் என்ற முறையை பயன்படுத்தி நடத்தப்பட்டதாகும்.

அதாவது பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய எந்த லிங்கையும் கிளிக் செய்யத் தேவையில்லை. பெகாசஸ் வைரஸ் மூலம் ஒருவரின் மொபைலில் உள்ள பாஸ்வேர்ட், குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்பு விபரங்களை உளவு அமைப்பு பெற முடியும். இந்த பாராகன் என்ற நிறுவனம் முன்னாள் இஸ்ரேலிய பிரதமம் மந்திரி எஹீட் பராக் என்பவரால் நிறுவப்பட்டதாகும். சமீபத்தில் இந்த நிறுவனம் தனி அமெரிக்க தனியார் பங்கு நிறுவனத்திற்கு டாலர் 900 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இருப்பினும் ஒப்பந்தத்திற்கு இன்னும் இஸ்ரேலிய கட்டுப்பாட்டாளர்களிடம் ஒப்புதல் தேவை என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.