துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிர்ஷ்ட லாட்டரி குழுக்கள் வாரந்தோறும் நடைபெறும். இந்நிலையில் நெல்லையில் பீர் முகமது ஆதம்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் அதிர்ஷ்ட லாட்டரியில் வாங்கிய சீட்டுக்கு 10 லட்சம் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 2.35 கோடி பரிசாக கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, நான் கடந்த 2007 ம் ஆண்டு முதல் துபாயில் வேலை பார்த்து வருகிறேன்.
என்னுடைய மனைவி மற்றும் 4 மகள்கள் நெல்லையில் வசித்து வருகின்றனர். துபாயில் கடந்த 3 வருடங்களாக நானும் என்னுடைய இந்திய மற்றும் பாகிஸ்தான் நண்பர்கள் என மொத்தமா 20 பேர் சேர்ந்து மாதந்தோறும் அதிர்ஷ்ட லாட்ரியில் பங்கு பெறுவோம். இந்த முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குழுக்களில் பங்கு பெற்றோம். முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளது. அதாவது 10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன் என்று கூறினார்.