ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
Seithipunal Tamil February 02, 2025 07:48 AM

இன்று 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

அந்த பட்ஜெட்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்தது. பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அதுபோன்ற அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் இன்று மதியம் இரண்டாவது முறையாகவும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. 

இதனால், இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 62,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.