பட்ஜெட் 2025: சுகாதார துறைக்கான நிதி கடந்த ஆண்டை விட அதிகரிப்பு..!
Seithipunal Tamil February 02, 2025 11:48 AM

2025 ஆம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு, கடந்தாண்டை விட இந்தாண்டு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பகுதிநேர பணியாளர்களுக்கு பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது; இதனால் 01 கோடி பணியாளர்கள் பயனடைவர்.

மேலும், இந்திய மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த, விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, தனியாருடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுஷ் அமைச்சகத்துக்கான நிதி 3,497.64 கோடி ரூபாயில் இருந்து 3,992.90 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 99,858.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு; கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி, 89,974.12 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார பணிக்கான ஒதுக்கீடு 36,000 கோடி ரூபாயில் இருந்து, 37,226.92 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் மருந்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான நிதி, 7,605.54 கோடி ரூபாயில் இருந்து, 9,406 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.