தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என பதிவுத்துறை அறிவித்தது. இன்று முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர். எனவே அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கி ஆவணப்பதிவு நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்குவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதே போல இன்று அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.