ரஜினி, எம்ஜிஆர், தம்பி விஜய் போல இல்லாமல் நான் ஒரு சாதாரண விவசாயினுடைய மகன்தான் என்று நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரை நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியின் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாதக கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஒரு பக்கமும், மாலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது சீமான் பேசுகையில், இந்த இடைத்தேர்தலில் வாக்கினை உதயசூரியனுக்கு போட்டதே படமாக கொண்டு வந்து கொடுத்தால் பணமாக கொடுப்பேன் என்று கூறி இருக்கிறார்கள்.
ஏனென்றால் பணம் வாங்கிக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு தான் நிச்சய மக்கள் வாக்களிப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் செய்த நன்மைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும். திராவிடம் ஆட்சி நல்லாட்சி என்று என்பதை யாரும் சொல்லவில்லை. அதையும் திமுகவினரை சொல்லிக் கொள்கிறார்கள். முதலமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மக்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வருகிறார்கள் . நான் யாரு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், தம்பி விஜய் போலவா? நான் ஒரு சாதாரண விவசாயியின் மகன்.
ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் இவ்வளவு மக்கள் வந்திருக்கிறார்கள். நம் வலியை மக்களின் வேதனையை அவர்களின் மொழியில் பேசுவேன் என்று இங்கு இவ்வளவு பேர் கூடி இருக்கிறார்கள். எனக்கானவன் என்ற நம்பிக்கை மக்கள் வந்து எனக்காக நிற்கிறார்கள். திமுக எங்காவது ஒரு இடத்தில் உண்மை பேசி இருக்கிறார்களா? மக்களை ஏமாற்றி காலத்தை ஓட்டி விட்டார்கள். பெரியார் யார் தெரியுமா என்று மட்டும் பதில் கேள்வி கேட்கிறார்களே? தவிர யாரும் பதில் சொல்வது கிடையாது. அவர் ஒரு ஊசி போன வெங்காயம். பெரியார் பேசியதையும் எழுதியதையும் படித்துவிட்டு தான் நான் பேசுகிறேன்” என்று கூறியுள்ளார்.