ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீது இளைஞர்களிடையே தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. அதனால்தான் இளைஞர்கள் சாதாரண பைக்குகளுக்குப் பதிலாக அப்பாச்சி, பல்சர் போன்ற பைக்குகளை வாங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், சில சிறந்த தேர்வுகள் இங்கே உள்ளன. இந்த பைக்குகளின் சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றம் பலரை ஈர்க்கிறது. இதனுடன், இந்த பைக்குகள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை மிக அதிகம் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இப்போது அதுவும் அப்படியில்லை. குறைந்த விலையில் கிடைக்கும் சில ஸ்போர்ட்ஸ் பைக்குகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V
முதல் ஸ்போர்ட்ஸ் பைக் டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V. இந்த டிவிஎஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை 1.26 லட்சம் ரூபாய். 17.4 பிஹெச்பி பவரையும் 14.73 பீக் டார்க்கையும் உருவாக்கும் 16 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பிரிவில் முதல் ரேம் ஏர் கூலிங் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது எஞ்சினில் இருந்து உருவாகும் வெப்பத்தை சுமார் 10 டிகிரி குறைக்கிறது. ஆயில் கூலிங் மூலம், இந்த பைக் Fi-யில் 114 கிமீ மற்றும் கார்ப் வேரியண்டில் 113 கிமீ அதிகபட்ச வேகத்தை எட்டும்.
யமஹா FZ-S FI V4
மூன்றாவது சிறந்த தேர்வு யமஹா FZ-S FI V4, இதன் டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலை 1.28 லட்சம் ரூபாய். டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS), முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், பின்புற டிஸ்க் பிரேக், மல்டி-ஃபங்க்ஷனல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி ஹெட்லைட், டயர் ஹக்கிங் ரியர் மட்கார்டு, லோயர் எஞ்சின் கார்டு, புளூடூத் எனேபிள்டு இணைப்பு போன்ற அம்சங்கள் இந்த மோட்டார் சைக்கிளில் உள்ளன.
பஜாஜ் பல்சர் NS160
இரண்டாவது சிறந்த தேர்வு பஜாஜ் பல்சர் NS160, இதன் தொடக்க விலை 1.24 லட்சம் ரூபாய். இந்த பைக்கில் 160 சிசி ட்வின் ஸ்பார்க் உள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V, யமஹா FZ-S Fi v3.0, சுசூகி ஜிக்ஸர் போன்ற பைக்குகளுடன் பஜாஜ் பல்சர் NS160 நேரடியாக போட்டியில் உள்ளது. இந்த பைக்கின் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 17 bhp பவரையும் 14.6 Nm டார்க்கையும் உருவாக்கும்.