ஈசிஆர் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சந்துரு என்பவர், காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலம் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குற்றவாளி, காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தை எப்படி பொதுவெளியில் ஊடகத்தினருக்கு கொடுக்கலாம்? இது சட்டவிரோதம் என்றும், இந்த வழக்கு விசாரணை திசை மாறி செல்வதாகவும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக ஐடி விங்க் பக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "ஸ்டாலின் மாடல் திமுக அரசு நடந்துவது சட்டத்தின் ஆட்சியா? சமூக வலைதளங்களுக்கான ஆட்சியா?
வேங்கைவயல், அண்ணா பல்கலை., இசிஆர் என முக்கிய வழக்குகள் அனைத்திலும், ஆடியோ, வீடியோ, FIR என லீக் ஆவது, குறிப்பாக திமுக-வைச் சேர்ந்தவர்கள் வாயிலாகவே லீக் ஆவதன் பின்னணி என்ன?
கோர்ட்டில் நடக்கவேண்டிய வழக்குகளின் போக்கை SOCIAL MEDIA NARRATIVE மூலம் திசைதிருப்ப முயல்வதா?
(பி.கு. : ஞானசேகரன் பேட்டி எப்போ ரிலீஸ் பண்ண போறீங்க திமுக?)" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதன் மற்றொரு செய்தி குறிப்பில், "நேற்று "கட்சி சம்மந்தம் இல்லை" என்று சொன்ன மரியாதைக்குரிய DC, இன்று வலிய வந்து அஇஅதிமுக-வுடன் இணைத்து பேச முயல்வது ஏன்?
இது DC அவர்களே உவந்து கொடுத்த பேட்டியா? அல்லது, சன் நியூசால் வாங்கப்பட்ட பேட்டியா என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.
அதிலும் அறிவாலய வாயிற்காவலர் ஆர்.எஸ்.பாரதி Wanted-ஆக என்ட்ரி கொடுத்து "DC பேட்டியை பார்த்தீர்களா?" என்று கேட்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை ரகம்!
திமுக-வின் லட்சணத்தை நாடே காரி துப்பிவிட்ட பிறகு, என்ன செய்வது என்று புரியாமல், Knee Jerk-ல் கண்டதை உளறிக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு!
குற்றம் செய்தவரின் தாத்தா அதிமுகவில் இருந்தால் என்ன ,மாமா அதிமுகவில் இருந்தால் என்ன,
குற்றம் புரிந்தவர் அதிமுகவில் இருந்தால் அது யாராக இருந்தாலும் எங்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அவர்களால் உடனடியாக நிரந்தரமாக நீக்கப்படுவார்.
ஆனால் எங்களின் கேள்வி- குற்றம் புரிந்தவரின் அந்த கார் திமுக கொடி கட்டி இருந்தது ஏன்?
மீண்டும் கேட்கிறோம், திமுக கொடி என்பது குற்றம் புரிவதற்கான லைசன்சா?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.