ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆளு நான்தான்டா.. ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆக்ரோஷம்..!
SeithiSolai Tamil February 03, 2025 02:48 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் நாளையுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓடுகின்றது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், நான் சுட்டுப் பயிற்சி எடுத்த போது துப்பாக்கி குறித்த பாடம் எடுத்தார். ஏ கே 74 துப்பாக்கி என்பது ரொம்ப சின்னதா ஒரு குச்சி மாதிரி தான் இருக்கும். சிம்பிளா சொன்னா அது ஒரு அரிசி மாதிரி இருக்கும் தோட்டா. நான் சுட்டுக் கொண்டே இருக்கும் போது அண்ணன் சொன்னார், ரஷ்யாவில் ராணுவத்தில் ஏகே 47 துப்பாக்கி இருந்தது, அதனை வாங்கி போலீசுக்கு கொடுத்துவிட்டு தற்போது ராணுவத்துக்கு ஏகே 74 துப்பாக்கி கொடுத்திருக்கிறார்கள்.

அதன்பிறகு தற்போது நம்மிடம் இந்த துப்பாக்கி இருக்கிறது, ரஷ்யாவிடமும் நம்மிடமும் மட்டும்தான் ஏகே 74 துப்பாக்கி உள்ளது என்று பிரபாகரன் அண்ணன் என்கிட்ட சொன்னப்ப நம்மிடம் இருக்கக்கூடிய இந்த துப்பாக்கி வேற யார்கிட்டயும் இல்லையா என்று நான் அவரிடம் கேட்டேன். இந்தியாவிலும் இல்லை என்று பதில் சொன்னார். அதைக் கேட்டதும் இந்தியாவில் ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான்தான் என்று சொன்னேன். அதற்கு அவர் ஆமாம் இதை அங்க போய் சொல்லுங்கள் என்று கூறினார். ஆமாடா ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன் என்று சீமான் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.