தஞ்சாவூர்: கல்லூரி கழிவறையில் மாணவிக்கு பிரசவம்; காதல் எல்லை மீறியதால் வகுப்பு நேரத்தில் அதிர்ச்சி.!
Tamilspark Tamil February 03, 2025 05:48 AM
காதல் வயப்படுவது தவறில்லை எனினும், திருமணத்திற்கு முன் தனிமையில் நெருங்கினால் எந்த மாதிரியான பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், அரசு மகளிர் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி ஒருவர், தனது வகுப்பறையில் இருந்தார். அப்போது, அவர் திடீரென வயிறு வலிக்கிறது என கழிவறைக்கு சென்று, நீண்ட நேரம் கழித்து உடல் சோர்வுடன் வந்துள்ளார்.

அவரின் ஆடையிலும் இரத்தக்கறைகள் இருந்ததால், சக மாணவி கேட்டுள்ளார். அதற்கு தனக்கு மாதவிடாய் என கூறிய நிலையில், சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

இதையும் படிங்க:

குழந்தை பிரசவம்

இதனால் பதறிப்போன மாணவிகள் பேராசிரியரின் உதவியுடன் அவசர ஊர்தியில் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி குழந்தையை பிரசவித்துள்ளதாகவும், இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதனால் மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ந்துபோயினர். பின் பள்ளியில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குப்பைத்தொட்டியில் இருந்த தொப்புள் கொடி அகற்றப்பட்ட பெண் குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டது.

காதல், தனிமையால் விபரீதம்



குழந்தைக்கும், மாணவிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவி யூடியூப் பார்த்து குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்தது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து மகளிர் காவல்துறையினரும் விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில், மாணவி, அவரின் உறவினர்கள் காதல் வயப்பட்டுள்ளனர். இதனால் ஒருகட்டத்தில் காதல் ஜோடி நெருங்கி பழகியதால் கர்ப்பமாகி இருக்கின்றனர். வயிறு குறித்து வீட்டிலும், மாணவியின் தோழிகளும் கேட்டபோது, பல காரணத்தை கூறி சமாளித்து இருக்கிறார்.

இறுதியில் அவர் குழந்தையை ஈன்றுவிட்ட நிலையில், மாணவி கொடுத்த வாக்குமூலத்தன்பேரில் விசாரணை நடக்கிறது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.