2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கொங்கடி திரிஷா 03 விக்கெட்டுகளையும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா மற்றும் பருனிகா சிசோடியா தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷப்னம் ஷாகில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.