அரியலூரில் வெங்கடேஷ், இலக்கியா(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளன. இந்நிலையில் இவருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இது குறித்து இலக்கியாவுக்கு தெரிய வரவே, இருவருக்கும் இடையே தவறாது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இலக்கியா தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். கடந்த சில மாதங்களாகவே தாய் வீட்டில் இருந்த இலக்கியா கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை தேட தொடங்கினர்.
அப்போது அவர்களது வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இலக்கியாவின் உடல் மிதந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திரிக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது எனக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் இலக்கியா என்னுடன் சண்டை போட்டுவிட்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
நான் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால் சமாதானமாகவில்லை. இதனால் அவரிடம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்தேன். அதன்படி வெளியே வந்த அவருடன், அவரது வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் வைத்து பேசிக்கொண்டிருந்தோம். அதன் பின் அவர் வீட்டிற்கு சென்றார். நானும் அவரை பின்தொடர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, அங்குள்ள வாய்க்காலில் சடலத்தை வீசி விட்டேன் என்று கூறினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.