நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம், எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார் தான் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அப்படி என்றால் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று பெரியார் ஏன் சொன்னார். ஆட்சிப் பொறுப்புக்கு திமுக வந்துவிட்டால் தமிழ்நாடு நாசமாகிவிடும் என்றார். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர காரணமே ராஜாஜி தான்.
ராஜாஜி அன்றைக்கு ஆரம்பித்த சுதந்திரா கட்சி தான் முக்கிய காரணம். பெரியார் காரணம் கிடையாது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் அடிப்படையாக கொண்டுள்ள இந்த பூமியை திராவிடம் என்ற போர்வையை போட்டு மறைத்து விட பார்க்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் ஆயுதம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கட்டாயம் பலிக்காது. திமுகவுக்கு எதிராக இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். இத்தகைய அரசை தூக்கி எறிந்து விட்டு ஒரே நோக்கத்தோடு நாம் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என பேசி உள்ளார்.