திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே..? இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்! - மதுரையில் 144 தடை உத்தரவு!
WEBDUNIA TAMIL February 03, 2025 05:48 PM

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ள நிலையில் மதுரையில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகபெருமான் கோவிலும், மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ள நிலையில், சமீபமாக அப்பகுதியில் மத ரீதியான வாக்குவாதங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிட இஸ்லாமியர்கள் சிலர் முயன்றபோது தடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிலர் அங்குள்ள சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:

திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம், தர்காவை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வருகின்றன. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நாளை போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதை தொடர்ந்து மதுரையில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளார் ஆட்சியர் சங்கீதா. இன்று காலை முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிராததால் ஒருவேளை அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயலலாம் என்பதால் பரபரப்பாக காணப்படுகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.