மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பழனி மலை முருகனுக்கு மாநாடு நடத்தி சனாதன இந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி அடிக்க வேண்டும் என சொன்ன நபருக்கு மகுடம் சூட்டுவதற்காக நடந்தது என்று தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. ஆங்கிலேயர்களின் தீர்ப்புப்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி உள்ளனர்.
மத நல்லிணக்கணம் என்பது எப்போது வருகின்றது. சிக்கந்தர் என்பவர் எப்படி மலையில் இறந்தார் அவர் எதற்கு அந்த மலைக்கு வந்தார். தர்கா வருவதற்கு முன்பு அங்கு இருந்தது யார், காசி விஸ்வநாதர் கோவில் தானே இருந்தது, காசி விஸ்வநாதர் கோவிலை இடிப்பதற்கு சிக்கந்தர் போனார் என்ற கருத்து தான் மக்கள் மத்தியில் உள்ளது. இந்து விரோத கொள்கையை தமிழக அரசு கைவிடுவது நல்லது. ஈவேரா பெயரைச் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் தமிழை விரும்புவர்களாக இருக்க முடியாது. தமிழை சனியன் மற்றும் காட்டுமிராண்டி கூட்டம் என்று சொன்ன ஈவேராவின் கூட்டம் தமிழ் பற்றாளர்களாக இருக்க முடியாது என்று எச்.ராஜா பேசி உள்ளார்.