அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் எனப் பலர் நடித்திருக்கும் பேபி & பேபி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தனா சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
நடிகை கீர்த்தனாஅது தொடர்பாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ``ரொம்ப நாளுக்கு அப்புறம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறேன். ஆரம்பத்துல ஜெய்க்கு அம்மா கேரக்டர்னு சொன்னாங்க. அப்புறம்தாம் சத்யராஜ் சார் கூட ஜோடிய நடிக்கனும்னு சொன்னாங்க. குழந்தைகள் பத்தி ரொம்ப அழகா படம் வந்திருக்கு. காட்சிகளை ரொம்பா அழகா எடுத்த கேமரா மேனுக்கு நன்றி. இந்தப் படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், ``எனக்கு இன்னிக்குதான் நடிகர் ஜெய் சிங்கிளா இருக்குறதே தெரிஞ்சது. இவ்வளவு நடிகர்களை ஒன்னு சேர்த்து வேலை வாங்குறது ரொம்பப் பெரிய விஷயம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். மதகஜராஜா, குடும்பஸ்தன் மாதிரியானப் படங்கள் வெற்றியடைந்ததைப் பார்க்கும்போது, ரத்தம், சண்டைனு பார்த்து சலித்த மக்கள், இந்தப் படங்கள் புதுவிதமா இருந்ததால வெற்றியடைய வச்சிருக்காங்க. அதுமாதிரியானப் படம்தான் பேபி & பேபி. அதனால நானும், ஜெய்யும் இந்தப் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறோம்.
தயாரிப்பாளர் - இயக்குநருடன் சத்யராஜ்இசை வள்ளல் இமான் இசையெல்லாம் சூப்பாரா இருக்கு. அஜித், விஜய்-க்கு ஜோடியா நடிச்சவங்கதான் இப்போ எனக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. அதனால நான் இன்னும் யூத்தாதன் இருக்கேனு நினைக்கிறேன். ஆனா, என் கூட நடிச்சதுக்கு அவங்க என்ன நினைக்கிறாங்கனுதான் தெரியல... இந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட் எப்போவும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இந்தப் படத்துல நடிச்சிருந்த அவ்வளவு பேரும் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். வெள்ளந்தியான, உஷாரான தயாரிப்பாளர்தான் யுவராஜ். இந்தப் படம் நிச்சியம் வெற்றிப்படமாக அமையும்." என்றார்.