Samantha: சென்னை அணியை வாங்கிய சமந்தா; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Vikatan February 03, 2025 11:48 PM

நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக்கில் (World Pickleball League) பங்கேற்கும் சென்னை அணியைச் சொந்தமாக வாங்கியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி சமந்தா உலக பிக்கில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் அணியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் சிட்டாடல் வெப் தொடர் இயக்குநர் ராஜ் நிடிமோருவின் கைகளை சமந்தா பிடித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதையடுத்து சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு டேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

விரைவில் இருவரும் தங்களது புதிய உறவை பற்றி அறிவிப்பார்கள் என்ற வதந்தியும் பாலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. இருப்பினும் இதுகுறித்து இருவரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

samantha

இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் இயக்குநர் டிகே இணைந்து தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, சிட்டாடல்: ஹனி பன்னி மற்றும் கன்ஸ் & குலாப்ஸ் போன்ற வெப் சீரிஸ் இயக்கி உள்ளனர்.

இவற்றில் தி ஃபேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.