வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் கேட்டு பெண் ஒருவர் விண்ணப்பித்த காசோலை இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக வங்கிக்குச் சென்றாலே அங்கு இருக்கும் சலானை நிரப்புவதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக சாமானியர்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். சிலர் அருகில் இருப்பவரிடம் உதவி கேட்டு சலானை நிரப்பிக் கொள்வார்கள்.
சிலர் அதில் இருக்கும் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டு விண்ணப்பிப்பார்கள்.அதேபோன்றுதான் இங்கு ஒரு பெண் வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
bank chequesmartprem19 என்ற Instagram பக்கத்தில் இந்தப் புகைப்படத்துடன் கூடிய வீடியோ பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த காசோலை விவகாரம் வைரலானது.
அந்த வீடியோவில் சங்கீதா என்ற ஒரு பெண், காசோலையில் இருக்க வேண்டிய தொகை எழுதும் இடத்தில் குறிப்பிட்ட தொகையை எழுதுவதற்கு பதிலாக "வங்கியில் எவ்வளவு பணம் உள்ளதோ" என்று கேட்டு எழுதியுள்ளார். இந்த காசோலை இணையத்தில் வைரலாகி வருகிறது. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தின்படி, இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடந்துள்ளது.