ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!
Seithipunal Tamil February 04, 2025 04:48 AM

ஆப்கானிஸ்தானில் இன்று 4.1 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறித்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 36.34 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 30ம் தேதி ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.