பிரீமியத்தை நிர்ணயிப்பதற்கு வாரியம் அங்கீகரித்த வயது, நோயின் தரவு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் போன்றவைகளை கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தயாரிப்பை வடிவமைத்து பிரிமியத்தை நிர்ணயம் செய்கின்றன என்று புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இன்று சமீப காலமாக மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை மிகவும் அதிகரித்து வருவதை IRDAI என சொல்லப்படும் மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் கவனித்து வருகிறதா? மேலும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்வதில் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றதா? என கேள்வி எழுப்பினர்.
வைத்திலிங்கம்எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி அவர்கள், அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது.பிரீமியத்தை நிர்ணயிப்பதற்கு வாரியம் அங்கீகரித்த வயது, நோயின் தரவு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் போன்றவைகளை கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தயாரிப்பை வடிவமைத்து பிரிமியத்தை நிர்ணயம் செய்கின்றன என்று (IRDAI) ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. மேலும், ஐஆர்டிஏஐ '(காப்பீட்டுத் தயாரிப்புகள்) விதிமுறைகள்- 2024' நியாயமான பிரீமியத்தை உறுதி செய்யும். அனைத்து வயது, பிரதேசங்கள், தொழில்சார் பிரிவு பாலிசிதாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப குறைந்த தொகையில் பிரிமீயத்தை அனைத்து வகையான மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கும் பல்வேறு காப்பீட்டுத் தயாரிப்புகளை காப்பீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும், க்ளைம் செய்யாத ஆண்டுகளுக்கு காப்பீட்டாளர்கள் பாலிசியை புதுப்பிக்கும்போது காப்பீட்டுத் தொகையை அதிகரித்தோ அல்லது பிரீமியம் தொகையைக் குறைப்பதன் மூலமோ 'நோ க்ளைம் போனஸ்' ஐ பாலிசிதாரர்கள் பெறலாம். பணம் செலுத்துபவர்கள் (சுகாதார காப்பீட்டாளர்கள்) மற்றும் சுகாதார வழங்குநர்கள் (மருத்துவமனைகள்) இடையே சிறந்த புரிதல் மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற உரிமைகோரல் அனுபவத்தை குறைந்த செலவில் வழங்குவதற்கும், ஐஆர்டிஏஐ விதிமுறைகள் 2024 முதன்மை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து காப்பீட்டாளர்களும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களின் பட்டியலிடப்பட்ட தரம் மற்றும் வரையறைகள் குறித்த கொள்கையை வைத்துள்ளது.
காப்பீட்டாளர்கள் காப்பீட்டு கவுன்சில்களுடன் இணைந்து இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவமனைகள் சிகிச்சை முறைகள் குறித்து பாலிசிதாரருக்கு சரியாக விளக்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் இணையத்தளத்தில் தங்கள் “Tie-Up” டை-அப் மருத்துவமனைகள்/சுகாதார சேவை வழங்குநர்களின் பட்டியலைக் காண்பிக்க வேண்டும் மற்றும் குறிப்பாக சிகிச்சை பணத்தை பெறுதல் குறித்தும் தெரிவிக்க வேண்டும். மேலும், இன்சூரன்ஸ் துறையில் திறனை அதிகப்படுத்த, பாலிசிதாரர்களுக்கு விரைந்து காப்பீடு கிடைக்க சுகாதாரத்துறையில் உருவாக்கப்பட்ட வாரியத்தில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், இணைந்துள்ளன. இவ்வாறு அவர் தனது பதிலில் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.