இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரே கடந்த 29-ஆம் தேதி தனது 100-வது ராக்கெட்டான ஜி எஸ் எல் வி எஃப்15-னை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அன்றைய தினம் காலை 6. 23 மணிக்கு ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டோவில் இஸ்ரே மையத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. என் வி எல் 2 செயற்கைக்கோள் தரை, கடல், விண்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காரங்களில் துள்ளியமான தகவலை தெரிவிக்கும் என இஸ்ரே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட நிலையில் அதன் சுற்றுப் பாறையை உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரே தெரிவித்துள்ளது.
செயற்கை கோளின் சுற்றிப் பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்பட்டதால் செயற்கைக்கோளின் ஒரு புவி வட்ட பாதையில் இருந்து மற்றொரு புவி வட்ட பாதைக்கு உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் புவியை சுற்றி உள்ள நீள் வட்ட பாதையான ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்பர் ஆர்பிட் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் பழுது இல்லாமல் நிலைக் கொண்டிருந்த நிலையில் அதை நீள் வெட்ட சுற்றுப்பாதையில் இருந்து புவி வட்ட சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரே தெரிவித்துள்ளது.
மேலும் மாற்று வழி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மிஷன் தோல்வி அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மீண்டும் இஸ்ரே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாக செயல்பட்டன எனவும், புவி வட்ட சுற்றுப் பாதையை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அடைய முடியாது என நினைத்தோம். ஆனால் மாற்று வழியில் மிகத் துல்லியமாக செயற்கைக்கோள் புவி வட்ட சுற்றுப்பாதை அடைந்துள்ளது. அதோடு செயற்கைக்கோளிலுள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. அதிலிருந்து அதிகப்படியான மின்சாரம் உற்பத்தி ஆகின்றது. இதன் மூலம் செயற்கைக்கோளுக்கும் இஸ்ரே மையத்திற்கும் தொடர்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.