நாளை விடுமுறை... ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு... டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
Dinamaalai February 04, 2025 12:48 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று பிப்ரவரி 3ம் தேதி முதல் வாக்குபதிவு நடைபெறும் நாளான நாளை பிப்ரவரி 5ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 8ம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி இந்த நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எப்எல்2, எப்எல்3, எப்எல்ஏ மற்றும் எப்எல்7 ஆகிய உரிமத்தலங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள்  மூடப்பட்டிருக்கும்.

இந்த நாட்களில்  மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.