கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சதாசிவ நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியின் எம்.எஸ். ராமையா தெருவில் கல்லூரி மாணவி ஒருவர் வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜனவரி மாதம் 25ஆம் தேதி அந்த மாணவியின் வீட்டிற்கு அதே கல்லூரியை சேர்ந்த அவரது தோழி சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து மாணவிகளிடம் ஆபாசமான முறையில் நடக்க முயன்று உள்ளார். மேலும் அவர்களை மிரட்டி 5000 ரூபாய் திருடிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை நடத்தியுள்ளனர். இதில் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்று, பணத்தை பறித்துச் சென்ற நபர் ஊர்க்காவல் படையை சேர்ந்த பாதுகாப்பு வீரர் சுரேஷ்குமார் (40) என்பது தெரியவந்தது. பின்னர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஊர் காவல் படை வீரரே இளம்பெண்களிடம் தவறாக நடக்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.