மத்திய பிரதேச மாநிலத்தில் தயானி சிங் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இந்த முதியவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இளைய மகன் தாமோதரன் தான் முதியவரை வயதான காலத்தில் பராமரித்து வந்துள்ளார். இதனால் தந்தை இறந்த பிறகு இறுதிச் சடங்குகளை தாமோதரன் செய்தார். அவருடைய அப்பாவின் கடைசி ஆசையும் இதுதான். ஆனால் மூத்த மகன் கிஷன் இதற்கு சம்மதிக்கவில்லை. தந்தைக்கு இறுதி சடங்கை தான்தான் செய்வேன் என்று கூறியதால் தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தகராறு முற்றிய நிலையில் கிஷன் அப்பாவின் உடலை பாதியாக வெட்டி தனக்கு தரும் படி கேட்டுள்ளார். அதாவது பாதி உடலை அவரும் பாதி உடலை அவருடைய தம்பியும் இறுதிச் சடங்கு செய்யுமாறு அவர் கூறிய நிலையில் இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. மேலும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தாமோதரனை இறுதி சடங்கு செய்யுமாறு கூறினார். மேலும் தந்தையின் உடலை பாதியாக வெட்டி இறுதி சடங்கு செய்ய கேட்ட மகனின் கொடூர கோரிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.