ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகிற தேர்தலில் பலிக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி சென்னை காமராஜ் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அண்ணாவின் வழியில் இனி வரும் சவால்களை சந்தித்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை வழங்கும் அனைத்து நிலைகளிலும் இருந்தும் அதிமுக தோழர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இன்று எங்களையெல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் நினைவிடத்திலிருந்து உறுதி ஏற்கும் அண்ணாவின் கொள்கை கோட்பாடுகளை கடைபிடித்து நடந்திருந்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய தோல்விய தந்திருக்க மாட்டார்கள். ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகிற தேர்தலில் பலிக்காது என்று தெரிவித்துள்ளார்