வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு அதிக அளவில் தங்கம், போதை பொருட்கள் விமான மூலம் கடத்தி வரப்படுகிறது. இந்நிலையில் இதை தடுக்க சுங்கத்துறையினர் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதன்படி மும்பை விமான நிலையத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுங்கத்துறையினர் சிறப்பு சோதனை செய்தனர். அதில் இரு வேறு சம்பவங்களில் தாய்லாந்தை தலைநகரமாகக் கொண்ட பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் சுமார் 50 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பொருள்கள் கடத்தி வரப்பட்டன.
இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கஞ்சாவை கடத்தி வந்த 5 பயணிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று ரியாத், மஸ்கட், துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 93.8 லட்சம் மதிப்புள்ள வைரமும், ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.