அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு இலக்கியா(31) என்ற மனைவி இருந்துள்ளார். வெங்கடேஷ்- இலக்கியா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருப்பூரில் தனியாக வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து வெங்கடேஷும் அந்த பெண்ணும் வசித்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் தொடர்பு வெங்கடேசன் மனைவி இலக்கியாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் இலக்கியா சிறுகனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறி சென்ற இலக்கியா வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது இலக்கியா அவர்களது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் இறந்து கிடப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் இலக்கியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இலக்கியாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரது பெற்றோர் இலக்கியாவின் கணவர் வெங்கடேஷ் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் வெங்கடேஷ் கூறிய வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மற்றொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது எனவும் இது தனது மனைவி இலக்கியாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தகராறு செய்து அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இது குறித்து பலமுறை சமாதானம் செய்ய முயற்சி செய்தேன் இருப்பினும் சமாதானம் ஆகவில்லை.
அவரை கொலை செய்ய முடிவு செய்து தனியாக அழைத்துச் சென்று மீண்டும் சமாதானம் பேசுவது போல ஏமாற்றி அவரை துணியால் கழுத்தை நெறித்துக் கொன்று அங்குள்ள கால்வாயில் வீசினேன் எனக் கூறியுள்ளார். பின்னர் காவல்துறையினர் வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலால் கணவர், மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.