``குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம் இது'' - 'ஒத்த ஓட்டு முத்தையா' பட விழாவில் பேசிய கவுண்டமணி
Vikatan February 04, 2025 10:48 PM
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில், கவுண்டமணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.

இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று( பிப்ரவரி 3) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்யராஜ், P.வாசு, சினேகன் போன்றோர் கலந்துகொண்டு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தைப் பற்றி பேசினார்கள்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய கவுண்டமணி, “என்ன பேசுறதுன்னு தெரியல. எனக்கு முன்னாடி பேச வந்த பிரபலங்கள் எல்லோரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பத்தி பேசிட்டு போயிட்டாங்க. குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம் இது. எல்லோரும் வந்து பாருங்கள். இந்த ஒத்த ஓட்டு முத்தயாவை வெற்றி ஓட்டு முத்தயாவாக மாற்றுங்கள்.

கவுண்டமணி

விழாவிற்கு வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள் என எல்லோருக்கும் நன்றி ” என்று கூறி இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.    

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.