பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பெரும்பவூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அனிதா. 21 வயதான அனிதா வெங்கூரில் உள்ள கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். மேலும் அனிதாவின் பெற்றோர் வெளிநாட்டில் உள்ளதால் இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தார்.
இந்நிலையில், வார விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்ற அனிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார்.அப்போது விடுதியில் உள்ள தனது அறையில் தங்கி இருந்த மாணவிகள் ஊருக்கு சென்றிருந்த நிலையில் அனிதா விடுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனால் கல்லூரில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மாணவி எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அப்போது அந்த கடிதத்தில் பெற்றோர் தன்னை மன்னித்துவிட வேண்டுமென மாணவி எழுதி வைத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.