கத்தி மாஸ்: விஜய் கெரியரில் ஒரு சில படங்கள் காலங்காலமாக நின்னு பேசும் படமாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அவருடைய கிராஃபையே மாற்றிய திரைப்படங்களாகவும் சில படங்கள் அமைந்திருக்கின்றன. அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படமாக அமைந்தது கத்தி படம். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.
ப்ளாக் பஸ்டர் ஹிட்: விவசாயி நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டி திண்பதை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைந்திருக்கும். இதில் ஒரு விஜய் ஊதாரித்தனமாக சுற்றும் கேரக்டர். இன்னொரு விஜய் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கேரக்டர். படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
ஹீரோவா?: இந்த நிலையில் கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். இவர் பாலிவுட்டில் கிட்டத்தட்ட 25 படங்களில் ஹீரோவாக நடித்தவர். மாதவனுடன் இணைந்து நடித்த 'ஹைசாப் பராபர்' என்ற படமும் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவர் பார்ப்பதற்கு வெளி நாட்டு நபர் போல இருப்பார். இதுதான் இப்போது இவருக்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது.
தோற்றத்தால் வந்த ஆப்பு: பார்ப்பதற்கு இந்தியர் போல இல்ல. போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம் சாட்டி கத்தி பட வில்லன் நீல் நிதின் முகேஷை சிறைபிடித்த நியூயார்க் விமான நிலைய காவலர்கள். எதை சொல்லியும் காதில் வாங்காமல் தன்னை நான்கு மணி நேரம் பிடித்து வைத்ததாக அவர் பரபரப்பாக பேட்டிக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு நடந்த சம்பவம்தான் வேற லெவல்.
இது பற்றி நடந்த விசாரணையில் தன்னுடைய பெயரை கூகுள் செய்யச் சொல்லி நீல் கேட்டுக் கொண்ட பிறகே அவரை நம்பியுள்ளனர். இந்த செய்தி அறிந்ததும் நம் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? கூகுள் பண்ண பார்த்த சொன்ன நீல் பேசாமல் கத்தி படத்த பாருங்கனு கூட சொல்லியிருக்கலாம் என்றும் இது போல நடக்கும் என்று அன்றே கணித்தார் சூர்யா என்றும் விவசாயியை ஏமாத்தி நிலத்த வாங்குனல? அந்த பாவம்தான் என்றும் கமெண்டை தெறிக்க விட்டு வருகின்றனர்.