அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி. இவர் ஈரோட்டில் அண்ணா நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயின் வளர்ச்சி பிடிக்காமல் தான் சீமான் பெரியார் பற்றி விமர்சிப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தான் சீமான் தொடர்ந்து பெரியாரைப் பற்றி விமர்சித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசி வரும் சீமானை தேர்தலுக்குப் பிறகு கைது செய்ய வேண்டும். அதன் பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் தேர்தலுக்குப் பிறகு முடக்கப்படும் என்றார். சீமானுக்கு என்ன பிரச்சனை என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன். அவருக்கு விஜய் மட்டும்தான் பிரச்சனை. நானோ அல்லது மற்ற யாரோ விஜயை கட்சி ஆரம்பிக்கும்படி கூறவில்லை.
அவர் கட்சி ஆரம்பித்தால் இவர் ஏன் இப்படி மனநிலை சரியில்லாதவர் போல் கத்த வேண்டும் என்பது புரியவில்லை. அண்ணன் திருமாவளவன் சொன்னது போல் அவரை டேஞ்சராக தான் பார்க்க வேண்டி இருக்கு. இவர் சரியான மனிதர் கிடையாது. இவர் செய்கின்ற செயல் சரியாக இல்லை இது டேஞ்சராகத்தான் முடியும். செருப்பை காண்பிப்பது, கெட்ட வார்த்தைகளால் பேசுவது, மரியாதை இல்லாமல் பேசுவது இதெல்லாம் எக்கச்சக்கமா போயிட்டு இருக்கு. சீமானை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் அமைதியாக தான் இருந்தார். ஆனால் விஜய் எப்போது கட்சி ஆரம்பித்தாரோ அப்போதே அவர் டான்ஸ் போட ஆரம்பித்துவிட்டார். மேலும் விஜய்யின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தான் இப்படி சீமான் நடந்து கொள்கிறார் என்று கூறினார் .