மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் ஆர்ஜிகர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரியில் படித்து வரும் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். இந்தப் பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் நிலையில் இவர்கள் இஎஸ்ஐ குடியிருப்பில் தங்கியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய மகளுக்கு அவர் பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போனை எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அறை பூட்டி இருந்த நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு தாயார் சிகிச்சைக்காக அழைத்து சென்றபோதிலும் செல்லும் வழியில் இறந்துவிட்டார். அந்த மாணவி ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்கொலை குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.