தந்தையின் உடலை இரண்டாக வெட்ட கோரிக்கை வைத்த மகன்.. அதிர்ச்சி தகவல்..!
இரண்டு மகன்களின் தந்தை காலமான நிலையில், அவரது உடலை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை தனக்கு தருமாறு, அந்த ஒரு பாதியை தான் இறுதிச் சடங்கு செய்ய போவதாகவும் கோரிக்கை விடுத்த மூத்த மகனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இறந்த தந்தையின் உடலை யார் அடக்கம் செய்வது யார் என்ற சண்டை வந்த நிலையில், இறந்த தந்தையின் மூத்த மகன் உடலை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை தனக்கும் மற்றொரு பாதியை தனது சகோதரருக்கும் அளிக்குமாறு கோரிக்கை வைத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
மூத்த மகனின் இந்த கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த இளைய மகன் சண்டை போட்டதாகவும், இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட போலீசார் வந்து சமாதானப்படுத்தியதாகவும் தெரிகிறது. போலீசின் அறிவுரைக்கு பின்னர் மூத்த மகன் உடன்படவே, இளைய மகனுக்கு அடக்கம் செய்யும் உரிமை அளிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் இளைய மகன் தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், இறந்த தந்தையின் உடலை இரண்டாக வெட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva