நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுமார் 40 நிமிடங்கள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மகாராஷ்ட்ரா தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெற்ற வெற்றியை தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டது என்ற கடுமையான குற்றச்சாட்டை சுமத்தினார் ராகுல் காந்தி.
மகாராஷ்டிராவில் பாஜகவின் தோல்வியை வெற்றியாக மாற்றிய தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் இமாச்சலப் பிரதேச மக்கள் தொகையை ஏன் சேர்க்கப்பட்டது?. திடீரென 70 லட்சம் புதிய வாக்காளர்கள் 5 மாததத்தில் எப்படி வந்தார்கள் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது என்ற ஆவல் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.