திருப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் மாட்டு கறி சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் நேற்றும், இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு இந்து முன்னணி அமைப்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை போடப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி 800க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.