கேரளாவை சேர்ந்தவர் பார்வதி நாயர். இவர் தமிழ் திரையுலகில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கமலுடன் உத்தமவில்லன், அஜித்துடன் என்னை அறிந்தால், விஜய்யுடன் தி கோட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை சேர்ந்த தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாவில் பார்வதி நாயர் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு அதனை ஸ்டோரியாகவும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் மலையாளி, அசோக் ஹைதராபாதை சேர்ந்தவர் என்பதால் திருமணம் குறித்த சடங்குகள் அனைத்தும் மலையாளம் மற்றும் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும்.
இதனை அடுத்து பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சென்னையில் திருமணம் நடக்க உள்ளதாகவும், அதன் பின் வரவேற்பு கேரளாவில் நடைபெறும் என கூறியுள்ளார். எனது வாழ்வில் அன்புக்குரியவருடன் புதிய பயணத்தை தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன் எனவும் தனது கணவர் குறித்து தெரிவித்துள்ளார்.