புதிய உச்சம் தொட்ட தங்கம்... நகை பிரியர்கள் அதிர்ச்சி!
Dinamaalai February 04, 2025 02:48 PM


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில்  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.

இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு  ரூ105 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7810க்கும், சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ ரூ.62,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.    இது குறித்து வியாபாரிகள் மெக்சிகோ, சீனா, கனடா  நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில்  மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை இதனால்   தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தங்க நகை  வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ106க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ106000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.