சிலர் வீடு கட்டுவதற்கு ஹோம் லோன்களை நம்பி இருந்தாலும் அவற்றுக்கு EMI கட்டியே வாழ்நாள் முழுவதும் செலவாகிவிடும். இதனால் கடன் வாங்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையில் காலம் நகர்ந்து விடும். எனவே கடன் வாங்காமல் வீடு கட்டுவது எப்படி என்பது குறித்த சிறிய ஆலோசனையை நாங்கள் வழங்குகிறோம்.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்க முன்பணமாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை நாம் கடன் வாங்க வேண்டும். மாறாக மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.10 லட்சத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 15 சதவீத வட்டி விகிதத்தில் 10 வருடங்களுக்கு ரூ.40 லட்சம் வருமானம் கிடைக்கும். 40 லட்சம் கடன் வாங்கும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்கு ரூ.36,000/- வட்டி செலுத்த வேண்டும். அதையும் சேமித்தால் ரூ.68 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். எனவே 10 ஆண்டுகளில் உங்கள் கையில் சேமிப்பாக 1.08 கோடி ரூபாய் இருக்கும். அதை வைத்து கடன் இல்லாமல் உங்களால் வீடு வாங்க முடியும்.