குட் நியூஸ்.. குறைகிறது வீட்டு லோன் ரெப்போ விகிதம்..!
Newstm Tamil February 04, 2025 02:48 PM

ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.

ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவிக்க உள்ளது. பலரும் எதிர்பார்த்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதன்படி ரெப்போ ரேட் விரைவில் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உயர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியபோது,ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனால் வட்டியும் இஎம்ஐ செலுத்தும் காலமும் உயர்ந்தது. ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது, உலகளவில் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் சமீபத்தில்தான் வட்டியை குறைத்தது. உலகளாவிய போக்கை ஆர்பிஐ பின்பற்ற வேண்டும். ரிசர்வ் வங்கி தனது கொள்கை முடிவை பிப்ரவரி 7 ஆம் தேதி அறிவிக்கும். மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் 250 பிபிஎஸ் புள்ளிகளை ரெப்போ விகிதத்தில் ஆர்பிஐ உயர்த்தியது. கடைசியாக 2020 மே மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து இந்த முறை 25 பிபிஎஸ் புள்ளிகளை ஆர்பிஐ ரெப்போ விகிதத்தில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உங்களின் இஎம்ஐ அல்லது இஎம்ஐ காலம் குறையும்.

ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும். இந்த விகிதத்தை பொறுத்து இஎம்ஐ அளவு அல்லது இஎம்ஐ காலத்தில் நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ள முடியும். சமீபத்தில்தான் பட்ஜெட்டில் புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதற்குள் மிடில் கிளாஸ் மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக அடுத்த அறிவிப்பு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.