Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த சுவாரஸ்ய அப்டேட்கள்.
ஸ்ருதியை கண்டுபிடித்த முத்து மற்றும் மீனா அவரிடம் ஏன் வக்கீல் எனக் கேட்க ரவி, நீதுவை அவன் தூக்கி வச்சிக்கிட்டு விளையாண்டு இருக்க. அதனால் தான் என்கிறார். ஆனால் மீனா அங்கு அவர் நீது விழுந்து விட்டு காலில் அடிப்பட்டு அவரை மருத்துவமனை அழைத்து சென்றதாக சொல்கிறார்.
இதை கேட்டு ஸ்ருதி ஷாக்காகி அய்யோ தலையில் அடித்து கொள்கிறார். தப்பு செஞ்சிட்டேன் மீனா என வருத்தப்பட அவரை சமாதானம் செய்து முத்து மற்றும் மீனா அழைத்துக்கொண்டு மண்டபத்துக்கு வருகின்றனர். அதற்கு முன் மண்டபத்தில் ரவி பதற்றமாக இருக்கிறார்.
வாசுதேவன் மற்றும் ஸ்ருதியின் அம்மா பதற்றமாக ரவியை கேட்கின்றனர். விஜயா மற்றும் அண்ணாமலையும் ஸ்ருதி எங்கே எனக் கேட்க அவரும் வந்துவிடுவார் என சமாளிக்கிறார். மனோஜ் உனக்காக தான் லீவ் விட்டு வந்திருக்கேன் எனக் கூற முடிஞ்சா இரு இல்ல விடு என்கிறார்.
அந்த நேரத்தில் சரியாக ஸ்ருதி வர எல்லாரும் அமைதியாகி விடுகின்றனர். ஸ்ருதி என்ன பயந்துட்டியா எனக் கூற ரவி ஆமா பதறிட்டேன் என்றார். இதை தொடர்ந்து எல்லாரும் தயாராகி கேக் வெட்ட வருகின்றனர். ரவி நானும் ஸ்ருதியும் இப்ப வரை லவ்வர்ஸா தான் இருக்கோம். இனிமே அப்படியே தான் இருப்போம் என்கிறார்.
இதை தொடர்ந்து, ஸ்ருதி நான் ரவியோட லவ்வரா தான் இருக்கேன். என்னை குடும்பமா ஏத்துக்கிட்டு எல்லாரும் பாத்துக்கிட்டாங்க. எனக்கு ஒரு சிஸ்டர் கிடச்சாங்க. மீனா எனக்கு நிறைய கஷ்டம் இருந்துச்சு. அதை அவங்க தான் சொல்லி கொடுத்து சரி செஞ்சாங்க என்கிறார்.