பொடுகு பிரச்சினை காணாமல் போக வைக்கும் கண் கண்ட வைத்திய முறை
Top Tamil News February 04, 2025 10:48 AM

பொதுவாக பொடுகு பிரச்சினை ஆரம்பத்திலேயே சரிசெய்யா விட்டால் தலை முழுவதும் இந்த பொடுகு பரவி திட்டு திட்டாக முடியுதிர்வை உண்டாக்கும் .இந்த பொடுகை எப்படி சரி செய்யலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாகும் .இதை தவிர்க்க வேண்டும் .2.மேலும் போதுமான அளவு இந்த குளிர் காலத்தில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் ஒரு காரணம் .மேலும் பொடுகை தவிர்க்க ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும் .
3.மேலும் முடிந்த வரை சூடான் நீரை தலை குளிக்க பயன்படுத்த வேண்டாம் .அடுத்து நல்ல தரமான ஷாம்பூவை உபயோகிக்க வேண்டும் .இதற்கு இயற்கையான முறையில் ஒரு தீர்வு உள்ளது அதை பார்க்கலாம்


4. காய்ந்த வேப்பம்பூவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள்.
பின்னர் காய்ச்சிய எண்ணெயை நன்கு சூடு  ஆறிய பிறகு தலையில் தேய்த்து குளிக்க வேண்டும் .
5.எண்ணெய் தலையில் தேய்த்த பிறகு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
6.இந்த எண்ணெயை தொடர்ந்து மூன்று மாதம் வாரம் இரு முறை என தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சினை முற்றிலுமாக மறைந்து முடி பளபளப்பாக மாறும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.