செவிலியரை விடுதியில் புகுந்து கத்தியால் குத்திய இளைஞன்; கோவையில் பரபரப்பு சம்பவம்.!
Tamilspark Tamil February 04, 2025 07:48 AM
காதலி பேச மறுத்த காரணத்தால், அவர் வேலை பார்க்கும் இடத்தில் கொலை முயற்சி சம்பவம் நடந்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலை, டிகேஎன்எம் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரியா என்ற பெண்மணி வேலை பார்த்து வருகிறார். இந்த மருத்துவமனை வளாகத்தில் விடுதியும் பணியாளர்களுக்கு இருக்கிறது.

அங்கு தங்கியிருந்து பிரியா பணியாற்றி வரும் நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுஜித் விடுதிக்கு வந்துள்ளார். அங்கு பெண்கள் விடுதிக்குள் செல்ல முயன்ற சுஜித்தை, பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்த முற்ப்பட்டனர்.

இதையும் படிங்க:

செவிலியருக்கு கத்திக்குத்து

அவர்களிடம் அவதூறான வார்த்தைகளை பேசி, விரைந்து பிரியாவை நோக்கி சென்ற சுஜித், பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முற்பட்டு, கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அதிர்ந்துபோன பாதுகாவலர்கள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் சுஜித்தை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் சுஜித் - பிரியா காதலித்து வந்ததும், சில மாதமாக பிரியா பேசாத காரணத்தால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து, சுஜித்தை அதிகாரிகள் கைது செய்தனர். செவிலியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.