கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட சூப்பிரண்ட் கௌதம் கோய்லுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஓமலூர் காவல்துறைக்கு சோதனையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஓமலூர் அடுத்த காமலாபுரம் பிரிவு சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. அதனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியதில் 357 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
மேலும் கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேஜாராம் (32) என்பது தெரிய வந்தது. மேலும் குட்காவை பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்றதாகவும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் தேஜாராம் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து கார் மற்றும் ரூபாய் 2,50,000 மதிப்புள்ள 357 கிலோ குட்கா போதை பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் அப்பகுதியில் தொடர் வாகன சோதனையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.