Career: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு; ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?
Vikatan February 03, 2025 11:48 PM
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

ஜூனியர் ஆப்பரேட்டர், ஜூனியர் அட்டெண்டன்ட், ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட்.

மொத்த காலி பணியிடங்கள்: ஜூனியர் ஆப்பரேட்டர் - தமிழ்நாட்டில் 13, புதுச்சேரியில் 1,

ஜூனியர் அட்டெண்டன்ட் - தெற்கு மண்டலத்தில் 7,

ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட் தெற்கு மண்டலத்தில் 3.

சம்பளம்: ஜூனியர் ஆப்பரேட்டர் மற்றும் ஜூனியர் அட்டெண்டன்ட் பணிக்கு ரூ.23,000 - 78,000.

ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.25,000 - 1,05,000.

கல்வித் தகுதி:

ஜூனியர் ஆப்பரேட்டருக்கு குறிப்பிட்ட சான்றிதழ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

ஜூனியர் அட்டெண்டன்ட் பணிக்கு 40 சதவிகித மதிப்பெண்ணுடன் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. கூடவே MS Worf, Excel, Power Point, ஒரு நிமிடத்தில் 20 வார்த்தைகள் டைப் செய்வது ஆகிய திறன்கள் வேண்டும்.

குறிப்பு: ஜூனியர் அட்டெண்டன்ட் பணியைத் தவிர, மீதி இரண்டு பணிகளுக்கும் குறிப்பிட்ட பணி அனுபவம் வேண்டும்.

ஜூனியர் ஆப்பரேட்டர் ஜூனியர் அட்டெண்டன்ட், ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட்.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

ஆப்பரேட்டர் மற்றும் ஜூனியர் அட்டெண்டன்ட் பணிக்குக் கணினி சார்ந்த தேர்வு, திறன் தேர்வு.

ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட் பணிக்குக் கணினி சார்ந்த தேர்வு மற்றும் கணினி திறன் சார்ந்த தேர்வு.

விண்ணப்பிக்கும் இணையதளம்:

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 23, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.