பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கடந்த வாரம் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் மாநிலங்களவையில் கும்பமேளா நெரிசலில் 30 பேர் இறந்தது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவையிலும் கும்பமேளா உயிரிழப்புகள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.